Sunday, November 8, 2009

இறந்துபோனவர்களின் நகரம்

எல்லோரும்
இறந்துபோன நகரத்தில்
சுற்றிக் கொண்டிருக்கிறேன்

மரண வாசனை
நின்றபாடில்லை

நீ எப்போது
இறந்து போவாய்
காலடியில் தட்டுப்பட்ட
ஒரு உடல் கேட்கிறது

நடுங்கச் செய்கின்றன
சாவின் பிம்பங்கள்
முடியாத அழுகுரல்களும்

தோள் வந்து அமரும்
பச்சைக்கிளி புன்னகைத்து
ஓடிப் போனது

எல்லோரும்
இறந்துபோன நகரத்திலிருந்து
வெளியேறிக் கொண்டிருந்தேன்
மரணத்தைப்
போட்டு விட்டு

2 comments:

சுபஸ்ரீ இராகவன் said...

இறந்து போனவர்களின் நகரத்தில் இருந்து அவர்கள் கனவுகளையும் சேர்த்து நனவாக்க நம்பிக்கை துளிர் விட்டு வீரியமாக வெளி வரும் நண்பனுக்கு என் வாழ்த்துக்கள்..

உங்கள் வரிகள் வள்ளுவனை நினைவுக்கு கொண்டு வந்தன..

இடும்பைக் கிடும்பை படுப்பர்
இடும்பைக் கிடும்பை படாதவர்

ராஜா சந்திரசேகர் said...

சுபஸ்ரீ
உங்கள் தொடர்ந்த வருகைக்கும்
கருத்துக்களுக்கும் நன்றி.