Monday, December 22, 2008

இருந்து
விளையாடு
காய் நகர்த்தும் காலம்

கண்களின் கோரிக்கை

நாம் பேசிய பிறகும்
பேச வேண்டும்
இதுதானே உன்
கண்களின் கோரிக்கை

Wednesday, December 17, 2008

ஊதி ஊதி

ஊதி ஊதி நீ
பெரிசாக்கிய காதல்
நீர் பந்து ஆச்சி
ஓடி ஓடி
அது காற்றில்
உடைந்தேதான் போச்சி

ஒலிப்பெருக்கி

பேசி முடித்துப் போனார்கள்
எல்லோரும்
ஒலிப்பெருக்கியில்
ஊர்ந்து கொண்டிருந்தது
மெளனம்

மீசை

அம்மாவுக்கு பெரிய மீசை
குழந்தை கிறுக்கிய
புகைப்படத்தில்

Tuesday, December 16, 2008

...பிய்த்தெறி

உன் கண்களில் இருக்கும்
காதலை பிய்த்தெறி
போய் விடுகிறேன்

இரு

என்னவும் செய்
செய்வதில் நீ இரு

இருக்கிறது

எல்லாமே இருக்கிறது
நீ இல்லாமல்
போய் விடாதே

Monday, December 15, 2008

இடம்

ஏறக்குறைய
இன்னொரு இடத்தையும்
ஆக்கிரமித்து
பயணம் செய்கிறீர்கள்
நிற்பவர்
தன் புன்னகையால்
உங்களைத்
தண்டித்துக்கொண்டிருப்பது
தெரியாமல்

Sunday, December 14, 2008

நடை

காலை நடையில்
வணக்கம் சொல்லி
மறைந்து போனது
ஒரு நண்டு

Thursday, November 27, 2008

நூலின்றி...

நூலின்றி பறக்கிறது
வானம் கிழித்து
செய்த பட்டம்

ஒன்றிலிருந்து

உன் புன்னகை
உதிர்கிற
சின்ன வார்த்தைகளில்
கட்டமைக்கப்படுகிறது
இந்த கவிதை

...கனவில்

சின்ன சதுரத்துக்குள்
முடியும் வீடு
முயல் வளர்க்கிறேன் கனவில்

Sunday, November 23, 2008

நீ...

கனவில்
கவிதைத் தடங்கள்
நீ நடந்து போயிருக்கிறாய்

Saturday, November 22, 2008

முதல் தேநீர்

பொன் துகள்
விடியலையும்
சேர்த்துக் கலக்கி
குடிக்கிறேன்
நாளின் முதல்தேநீரை

Sunday, November 9, 2008

மீதி வார்த்தைகள்

இந்த வார்த்தை மட்டுமே
எனக்குத் தெரியும்
மீதி வார்த்தைகள்
கவிதைக்குத் தெரியும்

புள்ளிக்குள்ளே...

இந்த புள்ளிக்குள்ளே
இருக்கிறது
நான் கடக்க இருக்கும்
மலை

Monday, October 27, 2008

...பார்த்து

பறிக்க நினைத்த கை
திரும்புகிறது
பழத்தின் புன்னகை பார்த்து

...பெருமழை

அசுர பசியுடன்
பெருமழை
ஆஸ்ட்ரேயில்
குவியும் சிகிரெட்
தட்டச்சில்
படபடக்கும்
முடியாத கவிதை

Sunday, October 26, 2008

.....

எதுவுமில்லை
நம்பிக்கையற்றவன்
நாட்குறிப்பில்

Saturday, October 25, 2008

நினைவுகள் தீர்ந்தபாடில்லை

உன்னை
மறந்து கொண்டிருக்கிறேன்
நினைவுகள் தீர்ந்தபாடில்லை

Friday, October 24, 2008

கிழிந்த பக்கங்கள்

குப்பை பொறுக்கும் சிறுவன்
எழுத்துக் கூட்டிப்படிக்கிறான்
பொறுக்கிய காகிதத்தின்
கிழிந்த பக்கத்தை

Tuesday, October 14, 2008

கை அள்ளும் நீர்

கை அள்ளிய நீரில்
கடவுளும் இருந்தார்
தன் தாகத்தைத்
தீர்த்துக்கொள்ள

Monday, October 13, 2008

அன்பின் அகராதி

வெட்டிய மரத்தை
கூறு போட்டார்கள்
நிறைய மரணங்கள்
-----
மீன் படிக்கும் கடல்
முடியவில்லை
தண்ணீர் பக்கங்கள்
------
ஒவ்வொரு முறையும்
ஒரு புன்னகை தருகிறாய்
உருவாகிறது
அன்பின் அகராதி
------

Saturday, October 11, 2008

...கயிறு

தற்கொலை
செய்துகொள்ளும் முன்பே
இறந்து போனேன்
ஏமாற்றத்துடன் பார்க்கிறது
தூக்குக்கயிறு

சிங்கமும் சுண்டெலியும்

சிங்கம் தூங்காது
சுண்டெலிதான் தூங்கும்
நீ சிங்கமா சுண்டெலியா
மகனிடம் கேட்டேன்
உடனே சொன்னான்
நிறைய சிங்கம்
கொஞ்சம் சுண்டெலி

Monday, October 6, 2008

வெள்ளை தாளில்...

எழுதாத கவிதையிலிருந்து
உதிர்ந்துகொண்டே இருந்தன
வார்த்தைகள்
முற்றாக வடிந்த
வெள்ளை தாளில்
படபடக்கும் நிசப்தம்

Friday, October 3, 2008

என்னை
நகர்த்தும்
நான்

...என்றாள்

என்னை உனக்கு
எதற்காக பிடிக்கிறது
கேட்டேன்
காரணங்களை சொல்ல
பிடிக்கவில்லை என்றாள்
குழந்தை ஆனந்ததில்
பெரிதாகும் பலூன்
அச்சம் எனக்கு

...காலண்டர் பெண்

ஒன்று
இரண்டு மூன்று
நான்கு
ஜந்து ஆறு ஏழு
எட்டு
ஒன்பது
பத்து என
தொடரும் சிகிரெட்டுகளுடன்
முடிகிறது
பகல்பொழுது
இருமலின் அதிர்வை
கேட்டபடி ஆஸ்ட்ரே
விரைத்த கண் பார்க்க
எப்போதும் போல்
காமம் வீசுகிறாள்
காலண்டர் பெண்
காற்றில் அசைந்து

இந்த முறை...

இந்த முறையும்
விழுந்தேன்
சென்ற முறையை விட
வேகமாக எழுந்தேன்