Saturday, April 7, 2018

ஒன்றுதான்

என் உணர்வின் தும்பிக்கையும்
யானையின்  தும்பிக்கையும்
ஒன்றுதான்
அப்போது
யானை நானாகவும்
நான் யானையாகவும்

     - ராஜா சந்திரசேகர் 

Wednesday, April 4, 2018




இன்று (04.04.2018)வந்துள்ள ஜூனியர் விகடனில்...

Monday, April 2, 2018

மிதந்து...

உன் புன்னகையைச்
சுமந்துகொண்டு
மிதந்து போகிறேன்

Tuesday, March 20, 2018

அலகில்

தன் அலகில்
மௌனம் எடுத்துவரும் பறவை 
என் உலகில் 
வைத்துவிட்டுப் போகிறது

Monday, March 19, 2018

விழும்

இமை விரிய
உள்நுழைந்த காட்சி
மனதில் விழும் 

Wednesday, February 28, 2018

பதினோராம் நூற்றாண்டில்

பதினோராம் நூற்றாண்டில்
இந்த நூலகத்தில்
தொலைந்து போனவர் 
இன்று நான்
படித்துக்கொண்டிருக்கும் 
புத்தகத்திலிருந்து 
என்னோடு பேசிக்கொண்டிருக்கிறார்

      -

Monday, February 26, 2018

அன்பின் நிறம்

எந்த நிறம் 
உங்களுக்குப் பிடிக்கும் 

அன்பின் நிறம்

Monday, February 12, 2018

கேள்வி/பதில்

நீங்கள் எதிர்பார்க்கும் பதில்
உங்கள் கேள்விக்கான
பதில் அல்ல

நீங்கள் வைத்திருக்கும் கேள்வி
உங்களுக்கான கேள்வி அல்ல

   

Thursday, February 8, 2018

அந்த அறையில்...

அந்த அறையில் ஒரு பியானோ இருந்தது
அதில் காலத்தின் தூசி படிந்திருந்தது
வாசிக்கத்தெரியாத ஒருவன் இருந்தான்
அவனோடு ஒரு நாய் இருந்தது
கூடவே இறந்துகொண்டிருக்கும் ஒரு முதியவள் இருந்தாள்
அவள் குளிரை தன் நடுக்கத்தால் விரட்டிக்கொண்டிருந்தாள்
அவன் பசித்த விரல் பியானோ கட்டையில் மோத
சத்தம் வருகிறது
உயிர் இருக்கிறது உயிர் இருக்கிறது என்று அவன் கூவியபடியே
முதியவளை சுற்றி வருகிறான்
நாய் குரைக்கிறது
அவள் இறந்து கொஞ்ச நேரமாகிறது

பெரிது

எதைப் பெரிதென்று 
நினைக்கிறீர்கள் 

சிறிதின் சிறிதை



Tuesday, February 6, 2018

அன்பெனும் பிரபஞ்சம்

உன் குறுஞ்செய்திகளில்
குவிந்திருப்பதை
அன்பெனும் பிரபஞ்சம்
என்ற தலைப்பில்
ஆயிரம் பக்கங்கள் எழுதலாம்