நம் உரையாடல் முடியும் தருவாயில்
உன் ஒரு புதிர்
என்னால் அவிழ்க்க முடியவில்லை
நீ ஆழமாகப் பார்க்கிறாய்
கேட்க வேண்டாம் என்று கிளம்புகிறேன்
தூறல் என் பதட்டத்தைக் குறைக்கிறது
உன் புதிரை ஆராய விரும்பவில்லை
புதிருக்குள் ஓடிப்போய்
எதையும் கண்டெடுக்கத் தீவிரப்படவில்லை
சிலவற்றைத் தெரிந்து கொள்ளாமல்
இருப்பதே நல்லது
உன் சதுரங்க வார்த்தைகளில்
நாளையும் விளையாடுவாய்
வேறு புதிர்களோடு முடிப்பாய்
நம் நட்பு இன்னும் சாத்தியப்படலாம்
நீயே புதிராக ஆகாதவரை
1 comment:
//நம் நட்பு இன்னும் சாத்தியப்படலாம்
நீயே புதிராக ஆகாதவரை//
Superb.
Post a Comment