Monday, March 14, 2011

ரகசிய நதி

1-

கண்ணீரின் அடியில்
ஓடுகிறது
ரகசிய நதி

2-

குடைக்குள் போனாலென்ன
நனைக்கிறது
மழைச் சத்தம்

3-

வேகமாக வரைகிறாள்
குழந்தை
நத்தையை

4-

உன் கனவை
என்னால்
உடைத்து விடமுடியும்

வீணாக
கனவு காணாதீர்கள்

5 comments:

பத்மா said...

arumai

ராஜா சந்திரசேகர் said...

பத்மா...
உங்களின் தொடர்ந்த வாசிப்பிற்கு நன்றியும் அன்பும்....

ராமலக்ஷ்மி said...

எல்லாம் அருமை. இருப்பினும் இரண்டும் மூன்றும் ரொம்பப் பிடித்தது.

She-nisi said...

வேகமாக வரைகிறாள்
குழந்தை
நத்தையை

மிக மிக அசத்தல்

வாழ்த்துகள்!

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

ரொம்ப நல்லா இருக்குங்க