Friday, February 25, 2011

நீங்கள்

இந்த அரங்கில்
முக்கியமாக
கருதப்படும் நீங்கள்
என்னைத் தவிர்க்கவே விரும்புகிறீர்கள்

இருந்தும்
ஒரு கணம்
பார்த்துவிடுகிறீர்கள்

அதிலிருந்து மீள்வதற்குதான்
உங்களுக்கு
நிறைய கனங்கள் தேவைப்படுகிறது

கூடவே
உங்கள் எச்சரிக்கை உணர்வின் மீது
கோபமும் வருகிறது

4 comments:

VELU.G said...

எதிர்ப்பு குறித்தான வலுவான கவிதை

ராஜா சந்திரசேகர் said...

நன்றி வேலு,நலமா!

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

கவிதை அருமை!

ராஜா சந்திரசேகர் said...

நன்றி தோழர்!