Wednesday, August 17, 2011

திரவ ஆயுதம்

1-

நினைவின் வலி
கண்ணோரம் துளி

2-

வார்த்தைகளை
அடுக்கி வைத்தேன்
படியேறிப் போனது
கவிதை

3-

பல நூறு
சந்திப்புகளான பின்னும்
அணையவில்லை
ஒற்றைப் பிரிவின் நெருப்பு

4-

ஆரம்பித்தபோது
இது கண்ணீர்

இப்போது
திரவ ஆயுதம்

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

1.
:(

2.
Cute one

3.
உயிர் சுடும் நெருப்புதானோ பிரிவென்பது

4.
உண்மைதான்.