Saturday, August 13, 2011

என்ன செய்ய

1-
கிளம்பும் ரயில்
நிற்பவர்களை எண்ணும்
சிறுமி
2-
அதிகாலை
பால் போடும் சிறுவன்
ரகசியமாய் பாடுகிறான்
3-
அழித்த பின்னும்
அழியவில்லை
மனதில்
4-
கண்ணீர் போல வந்த வரி
புன்னகைப் போல
பதிந்து போனது
5-
பிஞ்சு மழலையில்
தொலைந்து தொலைந்து
திரும்பும் தாய்
6-
அன்பின் நடனம்
நாயின்
வாலாட்டுதலில்
7-
பாரம் சுமந்தவன்
குரல் சுமக்கும்
துயரம்
8-
அதிகாலை கோலம்
வணக்கம் சொல்லிச்
செல்கிறேன்
9-
வயிற்றிலேயே
தாலாட்டுகிறாள்
வளரும் குழந்தையை
10-
எல்லாம் மறந்தாயிற்று
நினைவுகளில் சேர்த்து
என்ன செய்ய
11-
கரை ஒதுங்கிய பிணம்
பார்த்துப் போகின்றன
நடை பிணங்கள்

2 comments:

rajamelaiyur said...

Kavithai Kalakkal

கல்யாணி சுரேஷ் said...

1.
:)

2.
வெள்ளந்தி பாடல்

3.
மனதில் சிலவற்றை அழிக்க முடிவதில்லைதான்

4.
அந்த புன்னகை எப்போதுமே இருக்கட்டும்

5.
நானும்

6.
ரசித்தேன்

7.
:(

8.
இப்போதெல்லாம் நகர் புறங்களில் அதிகாலை கோலம் பார்ப்பதே அபூர்வம்தான்

9.
அருமை

10.
நினைவுகளில் சுமப்பது ஒரு சுகம் இல்லையா?

11.
"மனிதாபிமானம் விலை போகும்போது மனசாட்சி தூங்கி விடுமோ" என்ற பாடல் வரி நினைவுக்கு வருகிறது