Monday, February 9, 2009

உன்னைக் கூப்பிடுகிறேன்

மிகச்சுருக்கமாய்
என்ன பேசலாம் என்று
முடிவு செய்த பிறகு
உனனைக் கூப்பிடுகிறேன்
ஒலிக்கிறது
உன் கைபேசி
அந்த ஒலியோடு
சேர்கின்றன என்
வார்த்தைகளும்
நீ எடுக்கவில்லை
துண்டிக்கப்படுகிறது
என்றாலும்
முடிந்திருக்கிறது
என் உரையாடல்

2 comments:

Sugirtha said...

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது இந்த கவிதை...

Sometimes we feel like talking/ sharing something at that particular moment only and if they don't pick it up we never speak those words again. Too good...And the way you'd put that here in this poem is just (what can I say) I'm speechless...

ராஜா சந்திரசேகர் said...

அழகான கருத்துக்கள் சுகி.அன்பை கவிதை மட்டுமே பேசாமல் வாழ்க்கையும் பேச வேண்டும்.