Saturday, April 24, 2010

கனவில் பட்டாம்பூச்சி

கனவில் பட்டாம்பூச்சி
வைத்த பெயர் சொல்லும்போதெல்லாம்
அருகில் வந்து போகிறது
--------------
கடைசி முழப்பூ
வைத்துக் கொண்டு கிளம்புகிறாள்
பூக்காரி
--------------
விடுமுறை தினம்
கரும்பலகை எண்கள்
ஏமாற்றத்துடன் பார்க்கின்றன பெஞ்சுகளை
--------------
இந்த பேருந்திலும்
கேட்க வாய்த்தது
குழந்தையின் மழலை
--------------
செவ்வகத்தில் ஊறும் எறும்பு
போடுகிறது
வட்டங்களை
-------------
இறந்து போனவர்
வரைந்த ஓவியத்தின்
கண்களிலும் கண்ணீர்
-------------
கோயில் மணி
அடிக்கும்போதெல்லாம் திரும்புகிறது
கட்டப்பட்டிருக்கும் மாடு
--------------
நான் அடித்தபோது
உனக்கு வலித்ததா

அடித்தபோது
அவ்வளவாக வலிக்கவில்லை

கேட்டபோது
நிறையவே வலித்தது

3 comments:

ராமலக்ஷ்மி said...

வழக்கம் போலவே அத்தனையும் அருமை.

//விடுமுறை தினம்
கரும்பலகை எண்கள்
ஏமாற்றதுடன் பார்க்கின்றன பெஞ்சுகளை//

//செவ்வகத்தில் ஊறும் எறும்பு
போடுகிறது
வட்டங்களை//

இவை மிகவும்.

'இன்னொரு புத்தகம்' என்னவாயிற்று:)?

sathishsangkavi.blogspot.com said...

//விடுமுறை தினம்
கரும்பலகை எண்கள்
ஏமாற்றதுடன் பார்க்கின்றன பெஞ்சுகளை//

அழகிய அருமையான கவிதை....

கல்யாணி சுரேஷ் said...

//விடுமுறை தினம்
கரும்பலகை எண்கள்
ஏமாற்றதுடன் பார்க்கின்றன பெஞ்சுகளை//

குழந்தைகள் இல்லாத பள்ளிகள் நினைவுறுத்துகின்றன பூக்கள் இல்லாத பூங்காக்களை.


//நான் அடித்தபோது
உனக்கு வலித்ததா

அடித்தபோது
அவ்வளவாக வலிக்கவில்லை

கேட்டபோது
நிறையவே வலித்தது//

புரிந்து கொள்ளப்படாத நிலை வலி மிகுந்ததுதான்.