Wednesday, April 7, 2010

யாரும் என்னுடன் இல்லை

1-

எண்களைப் படிக்கும் சிறுமி
இருபத்து மூன்றாவது மாடியிலிருந்து
இறங்கும் லிப்ட்

2-

யாரும் என்னுடன் இல்லை
எழுதிய வரி இருக்கிறது
என்னுடன்

3-

எப்போது படித்தாலும்
புதிதாகவே இருக்கிறது
அப்பாவின் கடிதம்

4-

தனிமையைத்
தின்கிறது
சுவர் பல்லி

5-

சவப்பெட்டி செய்கிறவன்
அதில் விழுந்து மரணிக்கின்றன
வியர்வைத் துளிகள்

6-

மணலில் பிதுங்கிய
வளையல் துண்டு
குத்துகிறது காலில்

7-

அன்புடையீர்
மன்னிக்கப் பழகிக் கொள்ளுங்கள்
என் குற்றங்களை
வெளியிடப் போகிறேன்

8-

என் மேல்
ஏறி நின்று
பார்க்க வேண்டும்
எல்லாவற்றையும்

9-

உடைந்த மீன் தொட்டி
நிதானமாக
பொறுக்குகிறார்கள்

3 comments:

கல்யாணி சுரேஷ் said...

//எப்போது படித்தாலும்
புதிதாகவே இருக்கிறது
அப்பாவின் கடிதம்//

Nice. I like this line.

Sugirtha said...

ரொம்ப நல்லா இருக்கு ராஜா இந்த வரிகள்.
//என் மேல்
ஏறி நின்று
பார்க்க வேண்டும்
எல்லாவற்றையும்//

உமா said...

அருமை.வாழ்த்துக்கள்