Thursday, May 20, 2010

பசியின் இசை

1-

இறந்த வண்ணத்துப்பூச்சி
தூக்கி எறிந்து
பறக்க வைக்கிறாள் குழந்தை

2-

ஊருக்குப் போனவர்கள்
பால்கனி செடி காய்கிறது
தண்ணீர் இல்லாமல்

3-

மூடுபனியை
திறக்கப் பார்க்கும் கவிதை
தோற்றபடி

4-

கை நீட்டி
பாடும் குழந்தை
பசியின் இசை

8 comments:

சென்ஷி said...

//இறந்த வண்ணத்துப்பூச்சி
தூக்கி எறிந்து
பறக்க வைக்கிறாள் குழந்தை//

மிக மிக அருமை..

திருநாவுக்கரசு பழனிசாமி said...

//இறந்த வண்ணத்துப்பூச்சி
தூக்கி எறிந்து
பறக்க வைக்கிறாள் குழந்தை//

மூன்றே வரிகளாயினும் பதறுகிறது மனம்..குழந்தையாயிருப்பதால் ஆசுவாசப்படுவோம்.

Rekha raghavan said...

நான்கு கவிதைகளும் பிரமாதம்.

ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)

அ.முத்து பிரகாஷ் said...

// மூடுபனியை
திறக்கப் பார்க்கும் கவிதை
தோற்றபடி //
வாசித்து முடிக்கையில் என்னை அது திறந்திடக் கண்டேன்...
நீங்கள் தோற்றுக்கொண்டேயிருக்க...
சந்தோசம் கொள்வது நாங்கள் தாம் ....
புதிய கவிதைகள் எங்களுக்கு கிடைக்கிறதல்லவா ...

ராஜா சந்திரசேகர் said...

நன்றி சென்ஷி,திருநாவுக்கரசு பழனிசாமி,ரேகா ராகவன்,நியோ.

தமிழ்நதி said...

பசியின் இசை கொடுமையானது பாடுபவன்-ள் க்கும் கேட்டுக்கொண்டிருக்கும் இரக்கமுள்ளவர்களுக்கும்.

ராஜா சந்திரசேகர் said...

நலமா தமிழ்நதி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கல்யாணி சுரேஷ் said...

எல்லாமே நல்லா இருக்கு.