Tuesday, May 11, 2010

பனியின் பிள்ளைகள்

1-

ராணுவத்திலிருந்து
திரும்புகிறது வீர உடல்
அழும் கிராமம் பெருமையுடன்

2-

நிற்கவில்லை மழை
ரசித்தபடி அடுத்த கப்
தேநீர் குடிக்கும் மூதாட்டி

3-

மூடுபனிக்கிடையில்
நீயும் நானும்
பனியின் பிள்ளைகளைப் போல

4-

மதிய நேர பார்க்
காற்று தாலாட்ட
ஓய்வெடுக்கும் ஊஞ்சல்

5-

நனைந்து போகிறவள்
துவட்டிக் கொள்கிறாள்
தூறல்களில்

5 comments:

Sugirtha said...

//மதிய நேர பார்க்
காற்று தாலாட்ட
ஓய்வெடுக்கும் ஊஞ்சல்//

நல்லா இருக்குங்க ராஜா

ராஜா சந்திரசேகர் said...

நன்றி சுகி.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

//மதிய நேர பார்க்
காற்று தாலாட்ட
ஓய்வெடுக்கும் ஊஞ்சல்//

அருமை!

-ப்ரியமுடன்
சேரல்

கல்யாணி சுரேஷ் said...

1-
அருமை.
2-

மழையை ரசிக்கும் மூதாட்டியை ரசித்தபடி நான்.
3-

Romantic lines.
4-

Superb.

5-

மழையை போலவே அழகான கவிதை.

ராஜா சந்திரசேகர் said...

நன்றி சேரல்.