Saturday, April 7, 2018
ஒன்றுதான்
என் உணர்வின் தும்பிக்கையும்
யானையின் தும்பிக்கையும்
ஒன்றுதான்
அப்போது
யானை நானாகவும்
நான் யானையாகவும்
- ராஜா சந்திரசேகர்
யானையின் தும்பிக்கையும்
ஒன்றுதான்
அப்போது
யானை நானாகவும்
நான் யானையாகவும்
- ராஜா சந்திரசேகர்
Monday, April 2, 2018
Tuesday, March 20, 2018
Monday, March 19, 2018
Wednesday, February 28, 2018
பதினோராம் நூற்றாண்டில்
பதினோராம் நூற்றாண்டில்
இந்த நூலகத்தில்
தொலைந்து போனவர்
இன்று நான்
படித்துக்கொண்டிருக்கும்
புத்தகத்திலிருந்து
என்னோடு பேசிக்கொண்டிருக்கிறார்
-
Monday, February 26, 2018
Monday, February 12, 2018
கேள்வி/பதில்
நீங்கள் எதிர்பார்க்கும் பதில்
உங்கள் கேள்விக்கான
பதில் அல்ல
நீங்கள் வைத்திருக்கும் கேள்வி
உங்களுக்கான கேள்வி அல்ல
உங்கள் கேள்விக்கான
பதில் அல்ல
நீங்கள் வைத்திருக்கும் கேள்வி
உங்களுக்கான கேள்வி அல்ல
Thursday, February 8, 2018
அந்த அறையில்...
அந்த அறையில் ஒரு பியானோ இருந்தது
அதில் காலத்தின் தூசி படிந்திருந்தது
வாசிக்கத்தெரியாத ஒருவன் இருந்தான்
அவனோடு ஒரு நாய் இருந்தது
கூடவே இறந்துகொண்டிருக்கும் ஒரு முதியவள் இருந்தாள்
அவள் குளிரை தன் நடுக்கத்தால் விரட்டிக்கொண்டிருந்தாள்
அவன் பசித்த விரல் பியானோ கட்டையில் மோத
சத்தம் வருகிறது
சத்தம் வருகிறது
உயிர் இருக்கிறது உயிர் இருக்கிறது என்று அவன் கூவியபடியே
முதியவளை சுற்றி வருகிறான்
முதியவளை சுற்றி வருகிறான்
நாய் குரைக்கிறது
அவள் இறந்து கொஞ்ச நேரமாகிறது
Tuesday, February 6, 2018
அன்பெனும் பிரபஞ்சம்
உன் குறுஞ்செய்திகளில்
குவிந்திருப்பதை
அன்பெனும் பிரபஞ்சம்
என்ற தலைப்பில்
ஆயிரம் பக்கங்கள் எழுதலாம்
குவிந்திருப்பதை
அன்பெனும் பிரபஞ்சம்
என்ற தலைப்பில்
ஆயிரம் பக்கங்கள் எழுதலாம்
Monday, January 11, 2016
என்னவும் செய்.பிசாசே!
உன் கையைப்
பிடித்துக் கொள்ளவா!
பிடித்துக்கொண்டுதானே இருக்கிறாய்!
ஆமால்ல!
சரி இறுக்கமாகப்
பிடித்துக்கொள்ளவா!
என்னவும் செய்.பிசாசே!
அப்போதாவது
உன் வெட்கம்
வெளியேறுகிறதா..பார்க்கலாம்!
பிடித்துக் கொள்ளவா!
பிடித்துக்கொண்டுதானே இருக்கிறாய்!
ஆமால்ல!
சரி இறுக்கமாகப்
பிடித்துக்கொள்ளவா!
என்னவும் செய்.பிசாசே!
அப்போதாவது
உன் வெட்கம்
வெளியேறுகிறதா..பார்க்கலாம்!
Sunday, December 13, 2015
மனதின் அழகு
நான் அப்படி ஒன்றும்
அழகில்லையே
எப்படி என்னை
அழகாகப் படம் எடுத்தீர்கள்
அவள் கேட்டாள்
உங்கள் மனதின் அழகைப்
புன்னகையில்
வரச் செய்தேன்
அவ்வளவுதான்
என்றார் புகைப்படக்காரர்
Wednesday, November 4, 2015
சிதறிய சொற்கள்
நீ கைக்குட்டையை
உதறிய போது
சிதறிய சொற்களை
உனக்குத் தெரியாமல்
எடுத்துக் கொண்டேன்
அவைகளை
வரிசைப்படுத்திய போது
வாக்கியமானது
வளைத்த போது
வானவில்லானது
ஊதிய போது
பறந்து போனது
கை பிசைந்து நிற்கிறேன்
கடைசி ஒன்றை
செய்யாமல்
இருந்திருக்கலாமென்று
உதறிய போது
சிதறிய சொற்களை
உனக்குத் தெரியாமல்
எடுத்துக் கொண்டேன்
அவைகளை
வரிசைப்படுத்திய போது
வாக்கியமானது
வளைத்த போது
வானவில்லானது
ஊதிய போது
பறந்து போனது
கை பிசைந்து நிற்கிறேன்
கடைசி ஒன்றை
செய்யாமல்
இருந்திருக்கலாமென்று
Wednesday, October 7, 2015
காதலில் நனைந்தபடி
உன் குடையில்
நானும் வரலாமா
அவன் கேட்டான்
உன் மழையில்
நானும் நனையலாமா
அவள் கேட்டாள்
முதியவர் கையில்
குடை இருக்க
காதலில் நனைந்தபடி
இருவரும் போனார்கள்
நானும் வரலாமா
அவன் கேட்டான்
உன் மழையில்
நானும் நனையலாமா
அவள் கேட்டாள்
முதியவர் கையில்
குடை இருக்க
காதலில் நனைந்தபடி
இருவரும் போனார்கள்
Friday, October 2, 2015
Friday, September 11, 2015
அல்லது
காமம் காதலின் கழுத்தை
நெரித்துக் கொன்று விட்டது
என்ற வரியை எழுதியது
நானா
அல்லது
எழுதச் சொன்னது
காமமா
காதலா
Friday, July 17, 2015
சொற்கள்
களைப்படையும்
என் கால்கள்
உன்னை சந்திக்காமல்
திரும்பி விடலாம்
என் கால்கள்
உன்னை சந்திக்காமல்
திரும்பி விடலாம்
என் சொற்கள்
பறந்தேனும் வந்து
உன் மடி அமரும்பறந்தேனும் வந்து
Thursday, July 16, 2015
இப்போது
உன் கண்களில்
காமம் இருக்கிறது
உன் இமைகள்
அசைந்து அசைந்து
அதைக் காதலாக
மாற்றி விடுகிறது
இப்போது
உன் பார்வையில்
நான் காதலைக் காண்கிறேன்
காமம் இருக்கிறது
உன் இமைகள்
அசைந்து அசைந்து
அதைக் காதலாக
மாற்றி விடுகிறது
இப்போது
உன் பார்வையில்
நான் காதலைக் காண்கிறேன்





