Thursday, February 19, 2015

நீ வந்த போது

நீ வந்த போது 
நான் உறங்கிக் கொண்டிருந்தேன் 
அருகில் வந்து
மூச்சுக் காற்றால்
ஒரு குறிப்பெழுதிவிட்டுப் 
போய் விட்டாய்

Sunday, February 8, 2015

உன் வீடு

நான் வந்து சேர்ந்த 
இடத்தில் 
உன் வீடு இருந்தது 
பின் அது 
தொலைவாகிப் போனது 

Tuesday, February 3, 2015

வேறு பதில்

வேறு பதிலோடு 
நீ வரக்கூடும் 
என் கேள்வி உடைந்து 
அழக்கூடும்

வாசனை

உன் கண்களில் 
காதல் வாசனை 

முகர்ந்து பார்த்தா 
சொல்கிறாய் 

உணர்ந்து பார்த்து 
சொல்கிறேன்

Monday, January 5, 2015

பின் அட்டையில் சிரிக்கும் பெண்

பின் அட்டையில் 
சிரிக்கும் பெண்ணை 
எங்கோ பார்த்திருக்கிறேன் 
என்ற மயக்க உணர்வோடு 
மேலும் ஒரு முறை 
பார்க்கிறேன் 
இன்னும் ஒரு முறை 
சிரிக்கிறாள்

Sunday, January 4, 2015

உன் சாலையில்

நீ இல்லை என்று 
தெரிந்தும் 
பார்க்க வந்தேன் 
உன் சாலையில் 
திரும்பிப் போவது 
உன்னைச் சந்தித்துப் 
போவது போல் 
சந்தோஷம் தருகிறது

Friday, January 2, 2015

சொற்கள்

எனக்கான சொற்கள் 
உன்னிடமும் 
உனக்கான சொற்கள் 
என்னிடமும் 
இருக்கின்றன 
நாம் ஏன் 
பேசாமல் இருக்கிறோம் என்று 
தெரியவில்லை