Sunday, August 1, 2010

எதுவுமற்று

உரையாடினோம்

உன் வார்த்தையின்
வழிபிடித்து
எங்கோ போனேன்

எதுவுமற்ற அந்த வெளியில்
மிதந்தது இதமாக இருந்தது

எதுவுமற்று

சத்தமிட்டாய்

எல்லாம் அறுபட
உன் எதிரில்
அமர்ந்திருந்தேன்

எதுவுமற்று

அறுந்ததை தேடும்
பிள்ளையின் அழுகுரல்
என்னுள் கேட்டபடி

2 comments:

கல்யாணி சுரேஷ் said...

கவிதையினை வாசித்து முடித்த பின், சில கணங்களுக்கு எதுவுமற்ற வெளியில் நானும் மிதந்தேன்.

ராஜா சந்திரசேகர் said...

nice comment.thanks kalyani.