Monday, June 7, 2010

கடலின் மெளனம்

1-

மொட்டை மாடி
கதை சொல்லும் தாய்
கேட்கும் நட்சத்திரங்களும்

2-

இரவின் தண்டவாளத்தில்
கனவின் ரயில் பெட்டி
புள்ளியாகி மறையும்

3-

உன் ஒரு
சொட்டு கண்ணீரில்
கடலின் மெளனம்

4-

நகர வேலை
கிராமத்தில் என்னை
நட்டு வைத்துவிட்டுப் புறப்படுகிறேன்

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

1-
சின்ன வயசுல சாப்பிட்ட நிலா சோற்றுக்கு மனசு ஏங்குதுங்க.

2-
Nice lines.

3-
அந்த ஒரு சொட்டிற்கு கடலின் வலிமை கூட உண்டுதானே?


4-
Fantastic one.