Thursday, April 1, 2010

நினைவுகளும் மெளனங்களும்

1-

பூங்காவில் குழந்தைகள்
பெரியவர் கண்களில்
குளமிடும் பால்யம்

2-

சென்ற முறை
விழுந்த நான்
தூக்கிக் கொண்டிருந்தேன்
இந்த முறை
விழாமல் என்னை

3-

அதற்கு முன்பாக
தூக்கு கயிறை
வரைந்து பார்த்தான்
ஊர்ந்த எறும்பை
ஊதித்தள்ளிவிட்டு

4-

காலியான வீடு
நிரம்பிக் கிடக்கும்
நினைவுகளும் மெளனங்களும்

5-

வாசித்தவன் தூக்கத்தில்
புல்லாங்குழல் கேட்கும்
ரயில் சத்தம்

6-

விளையாடுகிறது
குழந்தையின் மழலையில்
நிலவு

7-

முன் ரயிலில் நிகழ்ந்திருக்கிறது
தண்டவாளத்தில்
ரத்தத்தின் வரைபடம்

6 comments:

Vidhoosh said...

twitter-ரிலே படித்தேன். ரொம்ப அழகான கோணங்கள் ஒவ்வொன்றும்.

3. அது ஏன் எல்லாருமே (கவிஞர்) ஒரு முறை தற்கொலையைப் பற்றியும் எழுதி விடுகிறீர்கள்??

ராமலக்ஷ்மி said...

எல்லாமே அருமை.

இதுவும் இதுவும் இதுவும் ரொம்பப் பிடித்தன.

//விளையாடுகிறது
குழந்தையின் மழலையில்
நிலவு//

//பூங்காவில் குழந்தைகள்
பெரியவர் கண்களில்
குளமிடும் பால்யம்//

//காலியான வீடு
நிரம்பிக் கிடக்கும்
நினைவுகளும் மெளனங்களும்//

வாழ்த்துக்கள்!

ராஜா சந்திரசேகர் said...

thanks vidhoosh and ramalakshmi.

butterfly Surya said...

அருமை. அழகான வார்த்தைகள்.

1 & 5 ரொம்ப பிடித்திருந்தது...

ராஜா சந்திரசேகர் said...

thanks surya

பிரேமா மகள் said...

ஹாய்.. ரொம்ப நாளாச்சு.. பிளாக் பக்கம் வந்து.. எப்படிங்க நீங்கமட்டும் கலக்கிக்கிட்டே இருக்கீங்க?