Monday, April 26, 2010

தேநீர் தருணங்கள்

1-

உன் கைபக்குவம்
இந்த தேநீருக்கு இல்லை
ஆனாலும் இது உன்னை
ஞாபகப்படுத்த தவறவில்லை

2-

மழையில் ஒதுங்கி
குடிக்கும் போது
அமுதமாகி விடுகிறது தேநீர்

3-

டீ கிளாஸ் கழுவும் சிறுவன்
அருகில் இருக்கும்
பள்ளிக்கூடத்தைப் பார்த்தபடி

4-

யாருடனும் பேசாத பைத்தியக்காரன்
பேசுகிறான்
முடியும் வரை தேநீருடன்

5-

தேநீர் குடிக்கும் முதியவர்
அவர் பிஸ்கெட்டுக்காக
காத்திருக்கும் நாய்

6-

பேப்பருடன்
தேநீர் குடிப்பவர்களுக்கு உதவுகிறது
டீ ஆறிய பின்னும்
செய்திகளில் இருக்கும் சூடு

7-
நண்பர்களோடு தேநீர் உரையாடல்
அப்போது குடிக்கிறோம்
சுவையான நேரங்களையும்

8-

நீ தந்த தேநீர்
உன் அன்பின்
சுவை போலவே

9-

சிரமமாக இருக்கிறது
பிடித்தமான கடையை விட்டு
வேறு இடத்தில்
டீ குடிப்பது

16 comments:

Vidhoosh said...

சூப்பர் சார். :)

ராஜா சந்திரசேகர் said...

நன்றி விதூஷ்

மணிஜி said...

சாருக்கு (சாருவுக்கு இல்லை) ஒரு ஸ்பெஷல் டீ..

சத்ரியன் said...

//டீ கிளாஸ் கழுவும் சிறுவன்
அருகில் இருக்கும்
பள்ளிக்கூடத்தைப் பார்த்தபடி//

சூழ்நிலை வாழ்வும், ஏக்கமும்!

சத்ரியன் said...

//பேப்பருடன்
தேநீர் குடிப்பவர்களுக்கு உதவுகிறது
டீ ஆறிய பின்னும்
செய்திகளில் இருக்கும் சூடு//

அதற்காகவே தேநீர் குடிக்கும் குடிமகன்களின் தலையாய பணி.

ராமலக்ஷ்மி said...

எல்லாம் அருமை.

//நண்பர்களோடு தேநீர் உரையாடல்
அப்போது குடிக்கிறோம்
சுவையான நேரங்களையும்//

ரசித்தேன்.

வெங்கட் said...

SUUUUUUUUUUUUUUPER....

பத்மா said...

தேநீர் அருந்துதல் தவம் .
அதைப்பற்றி கவிதை எழுதுதல் போல

ராஜா சந்திரசேகர் said...

நன்றி மணிஜீ,'மனவிழி'சத்ரியன்,ராமலட்சுமி,வெங்கட் மற்றும் பத்மா.உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும்.

Rekha raghavan said...

டீயைப் பற்றிய ஒன்பது கவிதைகளும் தூள்.

ரேகா ராகவன்.
(சிகாகோவிலிருந்து)

ராஜா சந்திரசேகர் said...

சந்தோஷமாக இருக்கிறது தங்கள் வார்த்தைகளை கேட்பது ரேகா ராகவன்.அன்பும் நன்றியும்.

வெங்கட் said...

சார்..
நேத்தே Super-ன்னு Comment
போட்டுட்டேன்..
ஆனா ஒரு வரியில பாராட்டுற
கவிதையா இதெல்லாம்..
அந்த தேநீர் மாதிரி
அனுபவிக்கணும்..

ரொம்ப பிடிச்சிருக்கு சார்..

உங்க மத்த பதிவுகளையும்
படிக்க போறேன்..
அதுக்கு நீங்க என்னை
தேநீர் விருந்து கொடுத்ததா
நினைச்சுக்கறேன்..!

ராஜா சந்திரசேகர் said...

நன்றி வெங்கட்.

கல்யாணி சுரேஷ் said...

//உன் கைபக்குவம்
இந்த தேநீருக்கு இல்லை
ஆனாலும் இது உன்னை
ஞாபகப்படுத்த தவறவில்லை//

அம்மாவின் சமையல் போல.

//நண்பர்களோடு தேநீர் உரையாடல்
அப்போது குடிக்கிறோம்
சுவையான நேரங்களையும்//

நண்பர்களுடன் கழித்த கடைசி தினத்தை நினைவுபடுத்துகிறது.

//நீ தந்த தேநீர்
உன் அன்பின்
சுவை போலவே//

சர்க்கரைக்கு பதிலா அன்பை கலந்திருப்பாங்களோ?

ராஜா சந்திரசேகர் said...

sugirtha dhandapani to me
Hi Raja,
How are you?
இப்போ தான் உங்க தேநீர் கவிதை படிச்சேன் ரொம்ப நல்லா இருக்கு. நிறைய comments வந்திருக்கு. பார்க்க சந்தோசமா இருக்கு. இந்த கவிதைகள் ரொம்ப நல்லா இருக்கு,

மழையில் ஒதுங்கி
குடிக்கும் போது
அமுதமாகி விடுகிறது தேநீர்

கடைசி முழப்பூ
வைத்துக் கொண்டு கிளம்புகிறாள்
பூக்காரி

பிரேமா மகள் said...

சுவையாய் தேநீர் குடித்த அனுபவம் உங்கள் கவிதை