Saturday, August 24, 2013

கவனித்தாயா

உன் மனதின் அருகில்
நான் பூத்திருப்பதை
கவனித்தாயா 

வெற்றிடம்

மௌனங்களால்
நிரப்புகிறாய்
வெற்றிடம்
பூக்கிறது 

Sunday, August 18, 2013

தெரியும்

நீ வருவாய் 
தெரியும் 
காத்திருப்பைப்
பாடலாக்குகிறேன் 

Sunday, July 28, 2013

சொற்களின் ரத்தம்

அமைதியின் சிலுவையில் 
உன்னை 
அறைந்து கொள்கிறாய் 
சொற்களின் ரத்தம் கசிகிறது

Thursday, March 21, 2013

படிதல்

நான் புல்
நீ என் மேல்
படிந்திருக்கும் 
வானவில்

Wednesday, March 20, 2013

அப்படியே


நீ பேசுகிறாய் 
உன் மெளனத்தில் 
நான் எழுதி வைத்ததை 
அச்சு பிசகாமல் 
அப்படியே

Tuesday, March 19, 2013

வண்ணங்கள்


பல நூறு வண்ணங்கள்
உன் கண்களில்
எடுத்து வரைய
எனக்குதான்
தெரியவில்லை