Sunday, December 29, 2013

விளிம்பில்

உன் எதிர்பார்ப்பையும் 
என்னால்
பூர்த்தி செய்ய முடியவில்லை 

என் எதிர்பார்ப்பையும் 
என்னால் 
பூர்த்தி செய்ய முடியவில்லை 

ஆனாலும் 
விளிம்பில் நின்று 
பேசிக் கொண்டிருந்தோம்
குதித்து விடாமல்

Friday, December 27, 2013

உனக்கும் கேட்கும்

அன்பால் அடைந்து விடலாம் 
என்று யாரோ 
எழுதிவிட்டுப் போன வரியை 
உரக்கப் படிக்கிறேன்
உனக்கும் கேட்கும் என 

Sunday, December 15, 2013

விடாமல் பெய்யும் கனவு

விட்டு விட்டுப்
பெய்யும் மழை
விடாமல்
பெய்யும் கனவு
இந்த உன்
குறுஞ்செய்தியில்
நீ
மழையாய்
கனவாய்
நானாய் 

Thursday, November 28, 2013

யாருக்கும் தெரியாமல்

யாருக்கும் தெரியாமல் 
உன் இருக்கைக்கு 
நான் வைத்து விட்டு 
வந்த முத்தம் 
உன்னோடு 
பயணம் செய்யக் கூடும் 

Saturday, November 2, 2013

நான் கடலாகிறேன்

உள்ளங்கையில் 
முத்தம் வைக்கிறாய் 
அது கப்பலென 
நகர்கிறது 
நான் கடலாகிறேன்

Thursday, October 24, 2013

யாரோ நீ

யாரோ நீ
சூரியன் இறங்கும்
வெளியில்
தொலைவில்
நடந்து போகிறாய்
என் மனதில் அழுத்தமாய்
பதிந்து போயிருக்கின்றன
உன் சுவடுகள் 

Monday, October 21, 2013

ஏதேனும் ஒரு வரியில்

ஏதேனும் ஒரு வரியில் 
உன்னை 
சந்தித்து விடுவேன் 
ஏதேனும் ஒரு வழியில்  
முடியாமல் போனாலும்