Thursday, October 24, 2013

யாரோ நீ

யாரோ நீ
சூரியன் இறங்கும்
வெளியில்
தொலைவில்
நடந்து போகிறாய்
என் மனதில் அழுத்தமாய்
பதிந்து போயிருக்கின்றன
உன் சுவடுகள் 

Monday, October 21, 2013

ஏதேனும் ஒரு வரியில்

ஏதேனும் ஒரு வரியில் 
உன்னை 
சந்தித்து விடுவேன் 
ஏதேனும் ஒரு வழியில்  
முடியாமல் போனாலும் 

Wednesday, September 11, 2013

மெளனத்தைக் குழைத்தபடி

தனிமையை நானும் 
என்னைத் தனிமையும் 
வரைந்து கொண்டிருக்கிறோம் 
வண்ணங்களாய் 
மெளனத்தைக் குழைத்தபடி

Thursday, September 5, 2013

கடந்து விடுவேன்

மெல்ல நினைவுகளிலிருந்து 
நீ வடிந்து விடுவாய் 
நான் இந்த மழையைக் 
கடந்து விடுவேன்

Saturday, August 24, 2013

கவனித்தாயா

உன் மனதின் அருகில்
நான் பூத்திருப்பதை
கவனித்தாயா 

வெற்றிடம்

மௌனங்களால்
நிரப்புகிறாய்
வெற்றிடம்
பூக்கிறது 

Sunday, August 18, 2013

தெரியும்

நீ வருவாய் 
தெரியும் 
காத்திருப்பைப்
பாடலாக்குகிறேன்