Monday, March 18, 2013

குழந்தை


எழுதவுமில்லை 
வரையவுமில்லை 
பென்சிலோடு 
விளையாடும் 
குழந்தை

Thursday, March 14, 2013

கண்ணீரில்


உன் கண்ணீரில் 
வானவில் ஒளிர்கிறது 
என்கிறேன்
புன்னகைக்கிறாய்

Monday, March 11, 2013

தனிமையின் மேல்


இந்த தனிமையின் மேல் 
நீ அன்பு நீரூற்றிப் 
போனச் செடி 
வளர்ந்து கொண்டிருக்கிறது

Wednesday, March 6, 2013

கனவில் வந்த பழம்


கனவில் வந்த பழம்
ஆப்பிள் என்று
தெரிந்து கொண்ட போது
அதை உண்ட சந்தோஷம்
கொண்டாள் குழந்தை

Tuesday, March 5, 2013

இரண்டிலும்


அடுக்கி வைக்கிறாள் 
கலைத்துப் போடுகிறாள் 
குழந்தை 
இரண்டிலும் 
அழகிருக்கிறது

Saturday, March 2, 2013

தேடுதல்


என் தேடுதலின் அடியில்
நீ ஊர்ந்து கொண்டிருக்கிறாய்
மண்புழு என

மணல்துகள்


நீ அகல்
உன்னால் ஒளிரும்
நான் மணல்துகள்