Saturday, March 2, 2013

மணல்துகள்


நீ அகல்
உன்னால் ஒளிரும்
நான் மணல்துகள்

Sunday, January 27, 2013

தொட முடியாத தூரத்திற்கு


நீ நட்சத்திரம் என்றேன்
குழந்தையை

தொடுங்கள் பார்க்கலாம்
எனச் சொல்லியபடியே
ஓடுகிறாள்
தொட முடியாத
தூரத்திற்கு

ஏணி


குழந்தை வரைந்த ஏணியில்
கடவுள் இறங்கி வந்தார்
குழந்தைக்கு
ஒரு முத்தம் வைத்துவிட்டு
மறைந்து விட்டார்

Sunday, January 6, 2013

கண்களில்


உன்னைக் கண்களில்
எடுத்துக்கொண்டு திரும்புகிறேன்
மறு முறை
சந்திக்கும் வரை
நீ தீர்ந்து போகாமல்
இருக்க வேண்டும்

Thursday, November 22, 2012

பூ

உன் புன்னகையிலிருந்து 
விழுகிறது பூ 
கவிதைச் சூடிக்கொள்ள

Monday, November 12, 2012

காலம்

காலம் நம்மை 
எப்படிப்பட்ட கதாபாத்திரங்களாக 
மாற்றி இருக்கிறது 
பார்த்தாயா 
நீ கல்லெறிகிறாய் 
நான் காயம் வாங்குகிறேன்

Saturday, November 3, 2012

முடியும்

இது பயணச் சீட்டின் 
பின் புறம் உன்னை 
எழுதிய வரிகள்தான் 
ஆனாலும் பயணம் 
முடியும் வரை
படிக்க முடியும்