படபடக்கும் பட்டாம் பூச்சி
எதைப் போர்த்திக்கொள்ளும்
-----
எப்போது தேடினாலும்
எழுதாதப் பேனாவே
கையில் கிடைக்கிறது
------
அம்மா காட்டிய உலகத்தைதான்
படித்துக்கொண்டிருக்கிறோம்
இன்னும்
-----
சித்தப்பாவின் கடிகாரத்தைக்
கட்டிக்கொண்ட குழந்தை
மணி பார்த்துச் சொல்கிறது
உலகத்திற்கு
---
சுவர்கள் பேசுவதைக்
கேட்கும்போதெல்லாம் கூடுகிறது
அமைதியின் கனம்
---
நகரத்தை விட்டு வெளியேறியவன்
சுற்றிக்கொண்டிருந்தான்
நகரத்திலேயே
----
நீ புள்ளியான தொலைவை
கடப்பது ஒன்றும் கடினமில்லை
அதுவும்
புள்ளிப்போலத்தான்
2 comments:
nice!
//எப்போது தேடினாலும்
எழுதாதப் பேனாவே
கையில் கிடைக்கிறது//
//நீ புள்ளியான தொலைவை
கடப்பது ஒன்றும் கடினமில்லை
அதுவும்
புள்ளிப்போலத்தான்//
ரசித்தேன்.
//நகரத்தை விட்டு வெளியேறியவன்
சுற்றிக்கொண்டிருந்தான்
நகரத்திலேயே//
அருமை.
Post a Comment