Monday, May 31, 2010

இசை படிந்த கோடு

1-

கடந்து வந்தபின்
திரும்பிப் பார்த்தேன்
நண்பனைப் போல்
தெரிந்தது பாலம்

2-

கூடவே வரும் வானவில்
வண்ணங்களின் கதைகளை
இறைத்தபடி

3-

சாப்பிடுவது போல்
பாவனை செய்கிறவன்
இன்னும் சோறு போட்டுக் கொள்கிறான்

4-

நள்ளிரவு குளிர்
தன் பிறந்தநாளை
நினைத்துக் கொள்ளும் காவலாளி

5-

நீர் அருந்தும் பறவை
தீர்க்கிறது
கவிதையின் தாகத்தை

6-

இசை படிந்த கோட்டின் கீழ்
இமை திறந்து பார்க்கும்
ஒலிகளும்

5 comments:

அன்புடன் நான் said...

நல்லாயிருக்குங்க... பாராட்டுக்கள்.

பிரேமா மகள் said...

ஹய்யோ.. எவ்வளவு நாளாச்சுங்க.. உங்க கவிதையை படிச்சு.... எல்லாமே சூப்பர்...

ராஜா சந்திரசேகர் said...

நன்றி கருணாகரசு,பிரேமா மகள்.

கல்யாணி சுரேஷ் said...

//கடந்து வந்தபின்
திரும்பிப் பார்த்தேன்
நண்பனைப் போல்
தெரிந்தது பாலம்//

எங்க ஊர் ஆற்றுப் பாலம் நினைவுக்கு வருகிறது.

//நீர் அருந்தும் பறவை
தீர்க்கிறது
கவிதையின் தாகத்தை//

ரொம்ப பிடிச்சிருக்கு.

ராஜா சந்திரசேகர் said...

thanks for your comments kalyani.