Sunday, May 23, 2010

மூன்று கவிதைகள்

1-

நீரில் தடுமாறும் நிலா
குழம்புகிறான்
குடிகாரன்

2-

தானியம் காலருகில்
ஆகாயத்தை அலகால் கொத்தும்
கூண்டுக்கிளி

3-

என் அன்பை
நீ எடுத்துச் செல்வாயா
பத்திரமாய்

இல்லை
உன் அன்பு
என்னை அழைத்துச் செல்லும்
பத்திரமாய்

9 comments:

ராமலக்ஷ்மி said...

//நீரில் தடுமாறும் நிலா
குழம்புகிறான்
குடிகாரன்//

:)!

//உன் அன்பு
என்னை அழைத்துச் செல்லும்
பத்திரமாய்//

அருமை.

ராஜா சந்திரசேகர் said...

நன்றி ராமலட்சுமி.

பா.ராஜாராம் said...

//தானியம் காலருகில்
ஆகாயத்தை அலகால் கொத்தும்
கூண்டுகிளி//

அடிச்சு போடுது சந்திரா.

ராஜா சந்திரசேகர் said...

மிக்க நன்றி பா.ரா.

Vidhoosh said...

///தானியம் காலருகில்
ஆகாயத்தை அலகால் கொத்தும்
கூண்டுக்கிளி///

தீராத தாகமும், தேடலும்.

பறவைகள் முகம் கொண்ட உங்கள் கவிதைகளுக்குள் எத்தனை பறவைகள்... :) ரொம்ப நன்றாக இருக்குங்க.

ராஜா சந்திரசேகர் said...

நன்றி விதூஷ்.

கல்யாணி சுரேஷ் said...

//தானியம் காலருகில்
ஆகாயத்தை அலகால் கொத்தும்
கூண்டுக்கிளி//

விடுதலைக்கான தாகம் தளும்புகிறது ராஜா.

//என் அன்பை
நீ எடுத்துச் செல்வாயா
பத்திரமாய்

இல்லை
உன் அன்பு
என்னை அழைத்துச் செல்லும்
பத்திரமாய்//


அன்பானது என்னவும் செய்யும்.

ராஜா சந்திரசேகர் said...

nice comments kalyani.thanks.

பத்மா said...

எப்போதுமே அருகில் இருப்பது தெரியாது ....இல்லாமல் போவது தான் விருப்பமாய் போகும் ...ஆனால் கிளி தேடும் சுதந்திரம் அதன் இறக்கையில் அல்லவா? கொடுமை .கவிதை அருமை