Monday, October 27, 2008

...பார்த்து

பறிக்க நினைத்த கை
திரும்புகிறது
பழத்தின் புன்னகை பார்த்து

...பெருமழை

அசுர பசியுடன்
பெருமழை
ஆஸ்ட்ரேயில்
குவியும் சிகிரெட்
தட்டச்சில்
படபடக்கும்
முடியாத கவிதை

Sunday, October 26, 2008

.....

எதுவுமில்லை
நம்பிக்கையற்றவன்
நாட்குறிப்பில்

Saturday, October 25, 2008

நினைவுகள் தீர்ந்தபாடில்லை

உன்னை
மறந்து கொண்டிருக்கிறேன்
நினைவுகள் தீர்ந்தபாடில்லை

Friday, October 24, 2008

கிழிந்த பக்கங்கள்

குப்பை பொறுக்கும் சிறுவன்
எழுத்துக் கூட்டிப்படிக்கிறான்
பொறுக்கிய காகிதத்தின்
கிழிந்த பக்கத்தை

Tuesday, October 14, 2008

கை அள்ளும் நீர்

கை அள்ளிய நீரில்
கடவுளும் இருந்தார்
தன் தாகத்தைத்
தீர்த்துக்கொள்ள

Monday, October 13, 2008

அன்பின் அகராதி

வெட்டிய மரத்தை
கூறு போட்டார்கள்
நிறைய மரணங்கள்
-----
மீன் படிக்கும் கடல்
முடியவில்லை
தண்ணீர் பக்கங்கள்
------
ஒவ்வொரு முறையும்
ஒரு புன்னகை தருகிறாய்
உருவாகிறது
அன்பின் அகராதி
------