நீ கை அள்ளும்
நீரைப் போலவே
எளிமையானதுதான்
என் அன்பும்
அருந்தலாம்
இல்லை அப்படியே
விட்டு விடலாம்
Saturday, February 21, 2009
Friday, February 20, 2009
வரும் சந்திப்புகளில்
இந்த சந்திப்பில்
நான் மறைத்த
பொய்களுக்கு
நீயும்
நீ மறைத்த
பொய்களுக்கு
நானும்
மன்னிப்புகளை
வழங்கிக் கொள்வோம்
வரும் சந்திப்புகளில்
நாம் பேசும்
உண்மைகள்
மற்ற பொய்களிலிருந்து
நம்மை
விடுவிக்கட்டும்
நான் மறைத்த
பொய்களுக்கு
நீயும்
நீ மறைத்த
பொய்களுக்கு
நானும்
மன்னிப்புகளை
வழங்கிக் கொள்வோம்
வரும் சந்திப்புகளில்
நாம் பேசும்
உண்மைகள்
மற்ற பொய்களிலிருந்து
நம்மை
விடுவிக்கட்டும்
Tuesday, February 17, 2009
நன்றி
உனக்கு நான்
சொல்ல நினைத்து
சொல்லாமல் போன
நன்றிகள் எல்லாம் சேர்ந்து
மாறி இருந்தன
பூந்தோட்டமாய்
இதற்கு எப்படி
நன்றி சொல்ல
சொல்ல நினைத்து
சொல்லாமல் போன
நன்றிகள் எல்லாம் சேர்ந்து
மாறி இருந்தன
பூந்தோட்டமாய்
இதற்கு எப்படி
நன்றி சொல்ல
Sunday, February 15, 2009
பட்டம்
சட்டென மறைந்து போனது
குழந்தை விட்ட பட்டம்
கடற்கரை நெரிசலில்
எப்படித் தேட
குழந்தையை சமாளிக்க
அப்பா சொன்னார்
பட்டம் வானத்துக்கு
அந்த பக்கம் போயிருக்கும்
கண் துடைத்தபடி
குழந்தை கேட்டது
பட்டம் என்னத்
தேடுமாப்பா
குழந்தை விட்ட பட்டம்
கடற்கரை நெரிசலில்
எப்படித் தேட
குழந்தையை சமாளிக்க
அப்பா சொன்னார்
பட்டம் வானத்துக்கு
அந்த பக்கம் போயிருக்கும்
கண் துடைத்தபடி
குழந்தை கேட்டது
பட்டம் என்னத்
தேடுமாப்பா
மணல்
முழு கடலையும்
தன் கண்களுக்குள்
சுருட்டிக்கொண்டு
ஓடுகிறாள் அவள்
நீரற்று தவிக்கிறது மணல்
என்னைப் போன்று
தன் கண்களுக்குள்
சுருட்டிக்கொண்டு
ஓடுகிறாள் அவள்
நீரற்று தவிக்கிறது மணல்
என்னைப் போன்று




