பூக்காரியிடம்
பேரம் பேசிக்கொண்டிருந்தேன்
அவள் சிரித்தபடியே
என்னை உதிர்த்துக் கொண்டிருந்தாள்
Sunday, February 15, 2009
Thursday, February 12, 2009
கடலில் புதைந்த கவிதை
நீங்கள்
மூழ்கி
நீர் குடைந்து
அடைந்தாலொழிய
மீட்டெடுக்க முடியாது
கடலில் புதைந்த
கவிதையை
மூழ்கி
நீர் குடைந்து
அடைந்தாலொழிய
மீட்டெடுக்க முடியாது
கடலில் புதைந்த
கவிதையை
Monday, February 9, 2009
உன்னைக் கூப்பிடுகிறேன்
மிகச்சுருக்கமாய்
என்ன பேசலாம் என்று
முடிவு செய்த பிறகு
உனனைக் கூப்பிடுகிறேன்
ஒலிக்கிறது
உன் கைபேசி
அந்த ஒலியோடு
சேர்கின்றன என்
வார்த்தைகளும்
நீ எடுக்கவில்லை
துண்டிக்கப்படுகிறது
என்றாலும்
முடிந்திருக்கிறது
என் உரையாடல்
என்ன பேசலாம் என்று
முடிவு செய்த பிறகு
உனனைக் கூப்பிடுகிறேன்
ஒலிக்கிறது
உன் கைபேசி
அந்த ஒலியோடு
சேர்கின்றன என்
வார்த்தைகளும்
நீ எடுக்கவில்லை
துண்டிக்கப்படுகிறது
என்றாலும்
முடிந்திருக்கிறது
என் உரையாடல்
விடுமுறையும் ஊரும்
விடுமுறைக்கு ஊர் வந்து
விடுமுறை ரத்து செய்யப்பட்டு
அவசரமாய் கிளம்பியபோது
அப்பா சொன்னார்
இதுக்கு நீ வராமயே
இருந்திருக்கலாம்
பதில் சொல்லாமல் திரும்பிய
என்னால் ஏமார்ந்திருக்கும்
ஊரும்
விடுமுறை ரத்து செய்யப்பட்டு
அவசரமாய் கிளம்பியபோது
அப்பா சொன்னார்
இதுக்கு நீ வராமயே
இருந்திருக்கலாம்
பதில் சொல்லாமல் திரும்பிய
என்னால் ஏமார்ந்திருக்கும்
ஊரும்
Thursday, February 5, 2009
Wednesday, February 4, 2009
உனக்கு...
நான் சென்று கொண்டிருப்பது
இருள் நிறைந்த பாதை
என்னிடமிருக்கிறது
உன் ஒளி நிறைந்த புன்னகை
(சுகிக்கு)
இருள் நிறைந்த பாதை
என்னிடமிருக்கிறது
உன் ஒளி நிறைந்த புன்னகை
(சுகிக்கு)




