Wednesday, December 17, 2008

ஒலிப்பெருக்கி

பேசி முடித்துப் போனார்கள்
எல்லோரும்
ஒலிப்பெருக்கியில்
ஊர்ந்து கொண்டிருந்தது
மெளனம்

மீசை

அம்மாவுக்கு பெரிய மீசை
குழந்தை கிறுக்கிய
புகைப்படத்தில்

Tuesday, December 16, 2008

...பிய்த்தெறி

உன் கண்களில் இருக்கும்
காதலை பிய்த்தெறி
போய் விடுகிறேன்

இரு

என்னவும் செய்
செய்வதில் நீ இரு

இருக்கிறது

எல்லாமே இருக்கிறது
நீ இல்லாமல்
போய் விடாதே

Monday, December 15, 2008

இடம்

ஏறக்குறைய
இன்னொரு இடத்தையும்
ஆக்கிரமித்து
பயணம் செய்கிறீர்கள்
நிற்பவர்
தன் புன்னகையால்
உங்களைத்
தண்டித்துக்கொண்டிருப்பது
தெரியாமல்

Sunday, December 14, 2008

நடை

காலை நடையில்
வணக்கம் சொல்லி
மறைந்து போனது
ஒரு நண்டு